க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வழி பிரச்னை காரணமாக வீட்டின் சுற்றுசுவரை இடித்து பெண்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதனாஞ்சேரி பகுதியை சேர்ந்த பிரகாசம் தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். இவருடைய விவசாய நிலத்திற்கு பின்புறத்தில் வசிக்கும் செல்வராஜ், ராணி, அப்பு, அஜய் ஆகியோர் பிரகாசத்திடம் கார் செல்லும் அளவுக்கு வழிகேட்டுள்ளனர். இதற்கு பிரகாசம் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த செல்வராஜ் தனது நண்பர் கார்த்திக் மூலம் அடியாட்களை ஏவி, பெண்கள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர், ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் 1 டிராக்டர் கொண்டு வீட்டின் சுற்று சுவர் இடித்து அட்டகாசம் செய்தனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...