திருச்சி : வெளிநாட்டு நபரின் கைப்பையை திருடி பாஸ்போர்ட் எரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி சமயபுரம் அருகே வெளிநாட்டு நபரின் கைப்பையை திருடி பாஸ்போர்ட்டை எரித்த தம்பதியை போலீசார் கைது செய்தனர். மலேசியாவை சேர்ந்த பிரித்திகா சிகிச்சைக்காக அவரது பெற்றோருடன் திருச்சிக்கு வந்துள்ளார். பின்னர் சமயபுரம் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு அங்குள்ள உணவகத்தில் உணவருந்திய போது, அவரது தந்தை சந்திரன் கைப்பையை மறதியாக விட்டு சென்றுள்ளார். பின்னர் திரும்பி சென்று பார்த்தபோது, உணவகத்தில் கைப்பை இல்லாததால் சமயபுரம் போலீசில் புகாரளித்துள்ளார். விசாரணையில், கைப்பையை எடுத்த உணவக துப்புரவு பணியாளர் அலமேலு, கணவர் அலெக்சுடன் சேர்ந்து அதில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு பாஸ்போர்ட்டை எரித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர்.

Night
Day