திருச்சி-அரசுப் பணி வாங்கித் தருவதாக்கூறி ரூ.1 கோடி நூதன மோசடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, சுமார் ஒரு கோடி ரூபாய்  மோசடி செய்துவிட்டு தலைமறைவான கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் டிஐஜி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், பெருங்குடி வலையம்பட்டியை சேர்ந்த முத்து என்பவரின் மகன் முத்துகுமார் அளித்துள்ள புகாரில், அரசு வேலைக்காக டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்ததாகவும், அப்போது தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்ட ஒருவர், அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள டி.ஆர்.ஓ. அலுவலகத்திற்கு வர வழைத்ததாகவும் குறிப்பிட்டுளார். மேலும், அங்கிருந்த கௌரிசங்கர், உஷாராணி ஆகியோர் அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் என்று கூறி தன்னிடம் இருந்து முதலில் ஆறு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து, இளையராஜா என்பவர் தன்னை நீர்வளத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அங்குள்ள அலுவலர்களை அறிமுகப்படுத்தி வைத்து, கல்வி சான்றிதழ்களை சரிபார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்

அதனை தொடர்ந்து போலியாக அரசு முத்திரையிட்ட பணிநியமன அரசாணை ஒன்றை வழங்கியதாகவும், அதற்கு முன்பாக, அங்குள்ள ஐந்து அரசு அலுவலர்களுக்கு லஞ்சம் தர வேண்டும் என்று கூறி தன்னிடம் இருந்து 25 லட்சம் ரூபாயை வங்கி கணக்கு மூலம் பெற்றுக்கொண்டதாகவும் புகார் மனுவில் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னா் அவா்களை தொடர்புக்கொண்ட போது, அவா்களுடைய தொலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புகார் மனு அளித்ததாகவும் முத்துக்குமார் கூறியுள்ளார். 

முத்துக்குமாரை போன்று 11 பேரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பறித்த மோசடி கும்பல் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துரை ரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

varient
Night
Day