திமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் கிராமத்தில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வழுதூர் கிராமத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாரியம்மன் ஆலய முளைப்பாரி உற்சவ திருவிழா நடைபெற்றது. விழா முடிந்து வரவு செலவு கணக்கு பார்க்கப்பட்டபோது இருதப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக மர்மநபர்கள் சிலர், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி கௌதம் என்பவரின் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதில், அவரது வீட்டின் முகப்பில் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இதுதொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Night
Day