திண்டுக்கல்: வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல்லில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகே வசித்து வரும் ருத்ரமூர்த்தி, கோவிந்தாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்றிரவு தனது புதிய இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை காணாததால் அதிர்ச்சியடைந்த அவர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது நள்ளிரவில் 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து ருத்ரமூர்த்தி அளித்த புகாரின்படி திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

Night
Day