திண்டுக்கல்: ஆளில்லா வீட்டினுள் புகுந்து நகை, செல்போன் திருட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வீட்டினுள் புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட நபரை போலீசார் கைது செய்தனர். மடூரை சேர்ந்த மாரியப்பன் என்பவரது வீட்டில் யாருமில்லாத நேரத்தில் உள்ளே புகுந்த மர்மநபர், நகை மற்றும் செல்போனை திருடியுள்ளார். மேலும், அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். அந்த பெண் மர்மநபரை தள்ளிவிட்டு தப்பியோடி, செல்போன் மூலம் உறவினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், வாடிப்பட்டியை சேர்ந்த ராஜசேகர் என்பவரை கைது செய்தனர். 

varient
Night
Day