எழுத்தின் அளவு: அ+ அ- அ
தஞ்சை அருகே நகை அடகுகடையில் போலி நகைகளை அடகு வைத்து சுமார் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பியோடிய நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் ராயல் மருத்துவமனை எதிரில் பாண்டித்துரை என்பவர் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சென்ற விளாரை சேர்ந்த இளம்பரிதி மற்றும் அவரது சகோதரர் விடுதலை வேங்கை ஆகிய இருவரும், நகைகளை அடமானம் வைத்து 6 லட்சத்து 93 ஆயிரத்து 500 ரூபாய் பெற்றுள்ளனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் கடை உரிமையாளர் மீண்டும் நகைகளை சோதனை செய்தபோது, அவை போலியானவை என்பதை கண்டறிந்தார். அவர்களது வீட்டிற்கு சென்று பார்த்தபோது இருவரும் வெளிநாடு சென்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். இதுகுறித்து கடை உரிமையாளர் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.