டிஜஜி, கமிஷ்னர் பெயரில் போலி முகநூல் கணக்கு... நூதன முறையில் பணம் பறிக்க முயற்சி...

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் சென்னை டிஐஜி பெயரில் முகநூலில் போலி கணக்கு உருவாக்கி, பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலி முகநூல் மூலம் மோசடி எப்படி அரங்கேறுகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

அண்மைகாலமாக ஆன்லைன் பண மோசடி அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சமூக வலைதளமான முகநூல் வழியாக நூதன முறையில் சிலர் பண மோசடியில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த வகையில், மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கு திங்கள் கிழமை காலை ஃபேஸ்புக் மெசேஞ்சர் மூலம் காவல் ஆணையர் லோகநாதன் பெயரில் 'பிரெண்ட் ரிக்வெஸ்ட்' வந்துள்ளது. அதை பார்த்த அந்த நபர், காவல் ஆணையரே 'பிரெண்ட் ரிக்வெஸ்ட்' கொடுத்ததாக நினைத்து ஏற்றுக்கொண்டுள்ளார். சில நிமிடங்களில் 'ஹாய்' எனக்கூறி மெசேஞ்சரிலேயே நலம் விசாரித்த போலி நபர், மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரரான தன் நண்பர் ஆசிஷ்குமார், வெளியூருக்கு இடமாறிச்செல்வதால் தன் வீட்டு பர்னிச்சர் பொருட்களை விற்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், உங்களுக்கு வேண்டும் என்றால் சொல்லுங்கள் என 'மெசேஜ்' வயிலாக பேசியிருக்கிறார். 

தொடர்ந்து, தொலைபேசி எண்ணையும் கேட்டு பெற்ற அந்த போலி நபர், அடுத்த சில நிமிடங்களில் மதுரையை சேர்ந்த நபரின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, அந்த போலி நபர் ஹிந்தி, ஆங்கிலத்தில் பேசியதால் சுதாரித்த மதுரை நபர், இதுகுறித்து ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். 

இதேபோல், சென்னையில் பணிபுரியும் டிஐஜி திருநாவுக்கரசு பெயரிலும் முகநூலில் போலி கணக்கு உருவாக்கிய மர்மநபர், திருநாவுக்கரசின் நண்பர் சிவக்குமார் என்பவரை தொடர்பு கொண்டு இதே பாணியில் பணம் பறிக்க முயன்றுள்ளார். சுதாரித்துக் கொண்ட சிவக்குமார், டிஐஜியிடம் தகவல் தெரிவிக்கவே, அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். 

சென்னை மற்றும் மதுரையில் காவல்துறையினரை மையப்படுத்தி ஒரே பாணியில் மோசடி செய்ய முயற்சி செய்த சம்பவம் குறித்து காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை மற்றும் மதுரையில் போலியான முகநூல் மூலம் மோசடி செய்ய திட்ட மிட்ட நபா்கள் யார்? இவா்கள் ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்களா? என காவல்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.. மேலும் இதுபோன்று குறுஞ்செய்தி வந்ததால் உடனே புகார் அளிக்கவும் காவல்துறையினா் அறிவுறுத்தியுள்ளனர்...

Night
Day