க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் நகைகள் திருட்டு குறித்து விசாரணை நடத்தியதால் பணிப்பெண் தற்கொலைக்கு முயன்றதை தொடர்ந்து, பணிப்பெண்ணின் மகள் ஞானவேல் ராஜா மீது புகாரளித்துள்ளார் . பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டில் நகைகள் திருடுபோனது தொடர்பாக கடந்த 14-ம் தேதி மாம்பலம் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் நகை திருட்டப்பட்டது குறித்து அவரது வீட்டு பணிப்பெண்ணான லட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மன உளைச்சலில் இருந்த லெட்சுமி அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட லட்சுமியின் மகள் திவ்யா ஞானவேல்ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகாரளித்தார்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...