க்ரைம்
பவாரியா கொள்ளையர்கள் 3 பேரும் குற்றவாளிகள்
பவாரியா கொள்ளையர்கள் 3 பேரும் குற்றவாளிகள்கும்மிடிப்பூண்டி தொகுதி முன?...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தங்கம் மற்றும் வைர புதையல் எடுத்து தருவதாக கூறி 7 லட்சம் ரூபாய் பணமோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த விமலா என்ற பெண், சகோதரரின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கொங்கணாபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரை பரிகார பூஜைக்காக நாடியுள்ளனர். 11 வகையான நவபாஷனங்களை குறிப்பிட்ட இடத்தில் தெளித்தால் தங்கம் மற்றும் வைர புதையல் கிடைக்கும் என ஆசைகாட்டிய சுரேஷ்குமார், உதவியாளர் சரவணனுடன் சேர்ந்து 7 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுள்ளார். நாளடைவில் உயிர் பயம் காட்டும் வகையில் பேசி பணம் கேட்டதால் சந்தேகமடைந்த விமலா, போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், போலி மந்திரவாதி சுரேஷ்குமார், அவரது உதவியாளர் சரவணனை கைது செய்தனர்.
பவாரியா கொள்ளையர்கள் 3 பேரும் குற்றவாளிகள்கும்மிடிப்பூண்டி தொகுதி முன?...
திருப்பதி ஏழுமலையான கோயிலில் காத்திருந்த பக்தர்களின் அருகேயே சென்று அவர?...