செம்மண் குவாரி முறைகேடு வழக்கு - பொன்முடி ஆஜராக உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் நவம்பர் மாதம் 11-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு  திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது, செம்மண் குவாரி நடத்திய அவரது மகன் கவுதமசிகாமணி மற்றும் உறவினர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக 200 அடி ஆழம் வரை செம்மண்ணை வெட்டி எடுத்து அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் அரசு தரப்பு சாட்சியங்களிடம் குறுக்கு விசாரணை முடிந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Night
Day