நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒருவளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 12ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Night
Day