சென்னை அண்ணாநகரில் எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணாநகரில் எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


அண்ணாநகர் W பிளாக் 5-வது பிரதான சாலையில் உள்ள ஏடிஎம்-மிற்குள் அதிகாலை புகுந்த முகமுடி அணிந்த மர்ம நபர் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது மும்பையில் உள்ள எஸ்பிஐ தலைமை அலுவலகத்தில் அலாரம் ஒலித்ததை அடுத்து, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி மேலாளருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் அளித்த புகாரின் பேரில், ஏடிஎம்-மில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி உதவியுடன் மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். திருட வந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தை முழுமையாக உடைக்க முடியாததால் திரும்பி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Night
Day