சென்னை : பொதுமக்களை தாக்கிய இங்கிலாந்து நாட்டு கடற்படை அதிகாரி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை ராயப்பேட்டையில் பொதுமக்கள் மற்றும் போலீசாரை தாக்கிய இங்கிலாந்து நாட்டு கடற்படை அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது. 

ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ அருகே மதுபோதையில் இருந்த வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், இளைஞரை பிடிக்க முயன்றபோது அவர் போலீசாரை கடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் பொதுமக்களின் உதவியோடு அந்த இளைஞரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கடற்படை அதிகாரி என்றும், துறைமுகம் அருகே கப்பல் ஒன்று பழுதாகி இருப்பதை பார்வையிட வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது

Night
Day