சென்னை பூவிருந்தவல்லி : ஊசி போட்டதில் முதியவர் பலி - சித்த மருத்துவர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பூவிருந்தவல்லி அருகே, ஊசி போட்டதில் முதியவர் பலியான சம்பவத்தில் சித்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த பெருமாள், அதே பகுதியில் சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார். சித்த மருத்துவத்துடன் ஆங்கில மருத்துவமும் அவர் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், உடல் நலக் குறைவு ஏற்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அப்போது ராஜேந்திரனுக்கு பெருமாள் ஊசி போட்டதாகவும், அடுத்த சில நிமிடத்தில் ராஜேந்திரன் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார், மருத்துவர் ராஜேந்திரனை கைலீலீது செய்து விசாரித்து வருகின்றனர்.

varient
Night
Day