சென்னையில் பெண்ணின் கை, கால்களை கட்டிப்போட்டு கொள்ளை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வளசரவாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கை, கால்களை கட்டிப்போட்டு கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவர் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை, நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் வீட்டில் உறங்கி கொண்டிருந்த சாந்தி மீது மயக்கம் மருந்தை அடித்ததோடு, கை, கால்களை கட்டிப்போட்டு, பீரோவில் இருந்த 25 சவரன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடினர். இதுகுறித்து, சாந்தி அளித்த புகாரின்பேரில், வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Night
Day