ஒடும் ரயிலில் ஐ.டி. பெண்ணுக்கு பாலியல் தொல்லை

எழுத்தின் அளவு: அ+ அ-

ஓடும் ரயிலில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

கடந்த 26-ஆம் தேதி பாலக்காட்டில் இருந்து கரூர் வழியாக சென்னை வந்த பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஐ.டி. பெண் ஊழியர் ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது அதிகாலை 2 மணி அளவில் அப்பெண்ணிடம் சக பயணி ஒருவர் தகாத முறையில் நடந்துள்ளார். இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் சென்னை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி, பழைய மகாபலிபுரம் சாலை பகுதியில் தங்கியிருந்த இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day