சிறுவன் கடத்தல் - பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஆஜர்

எழுத்தின் அளவு: அ+ அ-

சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தியிடம் திருவாலங்காடு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தினர்.

காதல் திருமணம் செய்த இளைஞரின் தம்பியை காரில் கடத்திய வழக்கில் பூவை ஜெகன்மூர்த்திக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கில் கைதான இளம்பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. 
வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கோரி பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் பெற்றிருந்தார். இதையடுத்து இன்று காலை திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஆஜரான புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வும் ஆன பூவை ஜெகன் மூர்த்தியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

Night
Day