எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வசிக்கும் இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தொடரும் நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு கட்டமாக டெஹ்ரான் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டெஹ்ரானில் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், டெஹ்ரானில் இருந்து மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் அறிவுறுத்தி இருந்தனர். இதையடுத்து டெஹ்ரானில் இருந்து மக்கள் சாரைசாரையாக வெளியேறி வருகின்றனர். அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையை மத்திய அரசும் துவங்கியுள்ளது. அதன்படி, ஈரானில் உள்ள இந்தியர்களை பேருந்து மூலம் அர்மேனியா எல்லைக்கு அழைத்து வந்து அங்கிருந்து விமானம் அல்லது கப்பல் மூலம் இந்தியா அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெஹ்ரானில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.