எழுத்தின் அளவு: அ+ அ- அ
இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானில் உள்ள 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட ஈரானில் உள்ள முக்கிய நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. போர் 5வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானில் சிக்கித் தவிக்கும் 10 ஆயிரம் மாணவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு வழிவகை செய்யுமாறு இந்தியா கேட்டுக் கொண்டிருந்தது. இதற்கு பதிலளித்த ஈரான் அரசு, தங்கள் நாட்டின் வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், தரைவழியாக எல்லையைக் கடந்து அஜர்பைஜான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு மாணவர்கள் செல்ல அனுமதி அளித்திருப்பதாக தெரிவித்தது. இதையடுத்து ஈரானில் தவிக்கும் இந்தியர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை மத்திய அரசு துவங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக 100 இந்தியர்கள் கொண்ட முதல் குழு இன்று இரவு அர்மீனியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.