சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - தஷ்வந்த் தூக்கு தண்டனை ரத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை போரூரை அடுத்துள்ள மதனந்தபுரத்தைச் சேர்ந்த பாபு - ஸ்ரீதேவி தம்பதியரின் மகள் ஹாசினியை தஷ்வந்த் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்தார். இதில், தஷ்வந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கொலை வழக்கில் தஷ்வந்திற்கு மரண தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த  தண்டனை உயர் நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், இதை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், குற்றத்தை நிரூபிக்க தவறியதாகவும், டிஎன்ஏ மாதிரிகள் ஒத்துப் போகாத நிலையில் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏற்கனவே, சிறுமி வன்கொடுமை வழக்கு நடைபெற்ற போது ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தனது தாயாரையும் கொலை செய்தார். இந்த வழக்கில் தஷ்வந்த்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில், சிறுமி கொலை வழக்கிலும் விடுதலை செய்யப்பட்டார். 

varient
Night
Day