திருவாரூர் : 10,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சாக்கு பற்றாக்குறை காரணமாக நெல் கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடியானது சுமார் 1.60 லட்சம் ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டு 90 சதவீத அறுவடை பணிகள் நிறைவு பெற்று எஞ்சிய அறுவடை பணிகளும் முழுவீச்சில் அறுவடை இயந்திரம் மூலமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை காய வைத்து அதன் பின்னர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காக விவசாயிகள் எடுத்து செல்கின்றனர். ஆனால் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை அரவைஆலை மற்றும் கிடங்குகளுக்கு கொண்டு செல்லாததால், மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான நேரடி நெல்கொள்முதல் நிலையங்களிலும் 10,000 நெல்மூட்டைகள் வரை தேங்கி கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இத்தகைய சூழலில் கடந்த இரு தினங்களாக இரவு நேரங்களில் பெய்துவரும் கனமழையின் காரணமாக திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குபற்றாக்குறையால் விவசாயிகள் கொண்டு வைத்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக மீனம்பநல்லூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சாக்கு பற்றாக்குறையால் சுமார் 5000க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளாக வேதனை தெரிவிக்கின்றனர். நேரடி கொள்முதல் நிலையத்தில் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் சாக்கு பற்றாக்குறையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் சாக்கு பற்றாக்குறை காரணமாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் விளம்பர திமுக அரசு காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். விளம்பர திமுக அரசின் அலட்சியத்தால் மழையில் நனைந்து சுமார் 10 ஆயிரம் நெல்மூட்டைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Night
Day