சாதி சான்றிதழில் முறைகேடு - கதறும் பெண் கவுன்சிலர்

எழுத்தின் அளவு: அ+ அ-

கொடைக்கானலில் போலி சான்றிதழ் மூலம் நகர்மன்ற தேர்தலில் வெற்றி பெற்று, மக்களை ஏமாற்றி வந்துள்ளார் திமுக பெண் கவுன்சிலர் ஒருவர். முறைகேடு நடத்தியது அம்பலமானதால், இனி எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்றும், இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்த வேண்டும் என்றும், பெண் கவுன்சிலர் கதறும் ஆடியோ குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

போலியான ஆவணங்களை தயாரித்து நகர்மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர் இவர்தான்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 24 வார்டுகள் உள்ளன. இங்கு 20-வது வார்டில் வசிக்கும் ரத்னம் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரிமளா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நகர்மன்ற தேர்தலில் 20-வது வார்டு பட்டியலின  பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில், தி.மு.க கட்சி சின்னத்தில் போட்டியிட்ட பரிமளா  வெற்றி பெற்றார். 

இந்த நிலையில் பரிமளா என்பவர் சாதி சான்றிதழை தனது கணவரின் sc சான்றிதழை வைத்து, தானும் பட்டியலினத்தவர் என போலியாக சான்றிதழை தயாரித்து, அதனை தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

இது குறித்து அந்த வார்டை சேர்ந்த சிலர் சந்தேகமடைந்து, மாவட்ட ஆட்சியர், கோட்டசியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் முறையிட்டுள்ளனர். அப்போது ரத்னம் என்பவரின் சாதி சான்றிதழை வைத்து அவரின் மகள் சங்கீதாவுக்கு மட்டுமே சாதி சான்றிதழை வழங்கியது தெரியவந்தது.

இந்த சான்றிதழை கவுன்சிலர் பரிமளா மாற்றி போலியாக ஆவணங்களை தயாரித்தாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர், பரிமளாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, தான் செய்தது தவறு என்றும், உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து கொள்ளுங்கள் என கூறும் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

வேண்டும் என்றால், தங்களின் காலில் கூட விழுகிறேன் என்றும், தன்னை மன்னித்து விடுங்கள் என்றும், தனது மகனுக்கு திருமணம் வைத்துள்ளதால், இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் என கவுன்சிலர் பரிமளா கதறும் ஆடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இனி எந்த தேர்தலிலும் தானும், தனது குடும்பத்தினரும் போட்டியிட மாட்டோம் என எழுதி தருவதாகவும் கவுன்சிலர் பரிமளா  தெரிவித்துள்ளார்.

போலியாக ஆவணங்களை தயாரித்து கொடுத்த பரிமளா மற்றும் அதற்கு துணையாக இருந்த அரசு துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவரை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Night
Day