கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு - மேலும் 4 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் நான்கு பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் நேற்று 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், 4 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 லேப்டாப்கள், 25 செல்போன்கள், 34 சிம்கார்டுகள், 3 ஹார்ட் டிஸ்க்குகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேரை கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Night
Day