க்ரைம்
வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் நகை திருட்டு..!
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் நகை திர?...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குனிக்கல் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் இரு தினங்களுக்கு முன் தனியார் எஸ்டேட் அருகே வெட்டப்பட்ட நிலையில் இறந்துகிடந்தார். இவரது உடலை மீட்ட போலீசார், கொலையாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்த சதீஷ்குமாரும் ரவுடி என்பது தெரியவந்தது. மேலும், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் சதீஷ்குமார் கொலை செய்யப்பட்டதையும் போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து பெல்லூர் பகுதியில் பதுங்கியிருந்த அதே பகுதியை சேர்ந்த மஞ்சுநாத் உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீசார் கத்தி, செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் நகை திர?...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கணவன் வெட்...