கிருஷ்ணகிரியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரியில் பெண்ணின் கழுத்திலிருந்த சங்கலியை பறித்து சென்ற நபரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஜக்கப்பன்நகரில் வசித்து வரும் கலைச்செல்வி என்பவர் தனது பேர குழந்தைகளை வழக்கம் போல் பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர், கலைச்செல்வியின் கழுத்தில் இருந்து தங்கசங்கிலியை பறித்து விட்டு சென்றார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட நபரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆந்திர மாநிலம் அனந்த்பூர் பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வர சுதர்சன குமார் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த ஒரு சவரன் தங்க நகையை மீட்டனர்.

Night
Day