நாகையில் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேதராண்யம் அருகே வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்ற வலியுறுத்தி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கோடியக்கரையில் தங்கி மீன்பிடித்து வரும் மயிலாடுதுறை உள்ளிட்ட வெளிமாவட்ட மீனவர்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதாராண்யம் தாலுகா மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் தங்கள் வலைகள் சேதமடைவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்து ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மீனவர்கள், கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Night
Day