சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 680 ரூபாய் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை, 85 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சம் தொட்டுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்தது. காலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்த தங்கம் விலை, பிற்பகல் மேலும் ஆயிரத்து 120 ரூபாய் உயர்ந்து. இதன்மூலம் சவரனுக்கு ஆயிரத்து 680 ரூபாய் அதிகரித்து 85 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் கிராம் 210 ரூபாய் அதிகரித்து 10 ஆயிரத்து 640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், வெள்ளியின் விலை காலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்த நிலையில் பிற்பகல் மேலும் ஒரு ரூபாய் உயர்ந்தது. இதன்மூலம் கிராம் 2 ரூபாய் அதிகரித்து 150 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருவது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.