செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊனமாஞ்சேரியில், அருள் அன்பு காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தை சமூக நலத்துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, காப்பகத்தில் தங்கியுள்ள 18 சிறுமிகள் தங்களுக்கு இங்கே பாலியல் தொல்லை அரங்கேறி வருவதாக புகார் அளித்தனர். அதன் பேரில், குழந்தைகள் நல அலுவலர் அளித்த தகவலின் பேரில், கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய போலீசார் குழந்தைகள் காப்பக உரிமையாளர் அருள் தாஸ், மகள் பிரியா, கார் ஓட்டுநர் பழனி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் சிட்லாப்பாக்கம் அரசு விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்குள் வண்டலூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விளம்பர திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களால் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டி உள்ளனர்.