இரட்டை பெண் கைக்குழந்தைகள் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

பெரம்பலூர் அருகே நாட்டு மருந்து கொடுக்கப்பட்ட இரட்டை குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி- தனலட்சுமி தம்பதி. இவர்களுக்கு ரேஷ்மா, தனுஸ்ரீ என இரட்டை பெண் குழந்தைகள் உள்ளன. குழந்தைகள் இருவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், இரண்டு குழந்தைகளையும் வாலிகண்டபுரம் கிராமத்தில் நாட்டு வைத்தியம் செய்து வரும் சைதானி என்பவரிடம் சிகிச்சை அளிக்க கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வைத்தியர் சைதானி குழந்தைகளுக்கு நாட்டு மருந்து கொடுத்தநிலையில், 2 பெண் குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக தாய் தனலட்சுமி, நாட்டு வைத்தியர் சைதானி உள்ளிட்ட 3 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Night
Day