எழுத்தின் அளவு: அ+ அ- அ
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் குடித்த பாதாம் பாலுக்கு காசு கேட்டதால் சூடான் பாதாம் பாலை விற்பனையாளர் மீது ஊற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.
சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தன் கம்யூனிஸ்ட் கட்சி நகரக் குழு உறுப்பினர் அமுதாவின் மகன் கஞ்சா ராகுல் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட கஞ்சா ராகுல் சில நாட்களுக்கு முன் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி இரவு வேணுகோபால் பிள்ளை தெருவில் உள்ள பாதாம் பால் கடைக்கு கஞ்சா ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் பாதாம் பால் கேட்டு குடித்துள்ளனர். பின்னர் கடை ஊழியர்கள் பணம் கேட்டபோது பெரிய ரவுடிகளான எங்களிடமே பணம் கேட்கிறாயா எனக் கூறி சுட சுட இருந்த பாதாம் பாலை ஊழியர் முகத்தில் ஊற்றிவிட்டு, கண்ணாடி டம்ளர்களை உடைத்துவிட்டு தப்பிச் சென்றனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கஞ்சா ராகுல் மற்றும் சபரி இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.