கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் 4வது நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமியை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் விமர்சையாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் 4வது நாள் உற்சவர் மலையப்ப சாமி கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் எழுந்தருளினார். 

புறப்பாட்டை முன்னிட்டு கோயிலில் இருந்து ராஜமன்னார் அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் மலையப்ப சாமி, வாகன மண்டபத்தை அடைந்து கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்களின் விண்ணதிரும் கோவிந்தா... கோவிந்தா... என்ற பக்தி முழக்கங்களுக்கு இடையே ஏழுமலையானின் கற்பக விருட்ச வாகன புறப்பாடு கோயில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. 

அப்போது, மாட வீதிகளில் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் ஏழுமலையானின் கற்பக விருட்சக வாகன புறப்பாட்டை கண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாட வீதியில் நடைபெற்ற கண்கவர் நிகழ்ச்சிகளையும் பக்தர்கள் கண்டு ரசித்தனர்.

Night
Day