கவரிங் நகைகளை கொடுத்து ஏழரை சவரன் தங்க சங்கிலி திருட்டு : பெண் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நகைக்கடையில் நூதன முறையில் ஏழரை பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். 

பேளூரில் உள்ள நகைக் கடைக்கு கடந்த 14-ஆம் தேதி பர்தா அணிந்து சென்ற பெண் ஒருவர் தான் அணிந்திருந்த நகைகளை கொடுத்து அதற்கு ஈடாக ஏழரை சவரன் தங்க சங்கிலியை வாங்கி சென்றுள்ளார். இதைடுத்து ஊழியர்கள் அந்த நகைகளை சோதனை செய்தபோது அவை கவரிங் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அப்போது, சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராதாவை கைது செய்து ஏழரை சவரன் தங்க சங்கிலியை பறிமுதல் செய்தனர்.

varient
Night
Day