கணவனால் கொல்லப்பட்ட பெண் உடல் தோண்டி எடுப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை பெருங்குடியில் மனைவியை கொலை செய்து புதைத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்த நவீன் என்பவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் மனைவி இருவரும் சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் பணி செய்து வந்தனர். இந்நிலையில் லட்சுமி காணமால் போன நிலையில், எங்கும் தேடியும் அவர் குறித்து எந்தவொரு தகவலும் தெரியததால் பெண் வீட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குப்பை கிடங்கில் பதுங்கியிருந்த கணவனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொலை செய்து விட்டு உடலை பெருங்குடி குப்பை கிடங்கில் புதைத்து விட்டதாக நவீன் தெரிவித்துள்ளார். 

இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த துரைப்பாக்கம் போலீசார், தாசில்தார் முன்னிலையில் பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day