அஜித் கொலை வழக்கு - மடப்புரம் கோயில் ஊழியரிடம் சிபிஐ விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக திருப்புவனம் காவல்நிலையம் மற்றும் சாட்சிகளிடம் 2வது முறையாக விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள், மடப்புரம் பகுதியிலும் ஆய்வு செய்தனர். ஏற்கனவே கடந்த சனிக்கிழமை மடப்புரம் கோவில் பின்புறம் உள்ள கோசாலை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், தற்போது கடைகள், திருமண மண்டபங்கள் என அனைத்து இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து சில ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர். இதைத்தொடர்ந்து மடப்புரம் காளியம்மன் கோவில் பணியாளர் பிரபு என்பவர் மதுரை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். பணியாளர் பிரபுவிடம் சிபிஐ அதிகாரிகள் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். 

Night
Day