க்ரைம்
திருப்பூரில் தனியார் பேருந்து ஓட்டுநர் வீட்டில் கொள்ளை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்?...
கடலூர் மாவட்டம் வடலூரில் வீட்டின்முன் திமுக கொடிக்கம்பத்தை நட எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் மண்டையை உடைத்த திமுக கவுன்சிலர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். வடலூரில் வள்ளலார் சர்வதேச மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியுள்ளனர். இந்நிலையில் அப்பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்ற திமுகவினர் தனலட்சுமி என்பவரது வீட்டின் முன் கட்சி கொடிக்கம்பத்தை நட முயன்றனர். அதற்கு தனலட்சுமி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர் ராஜபூபதி, வீடு புகுந்து தனலட்சுமி மற்றும் அவரது மகனை கொடூரமாக தாக்கி, பொருட்களையும் சேதப்படுத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், திமுக கவுன்சிலர் ராஜபூபதி மற்றும் அவரது தம்பி ரவி உட்பட 3 பேரை கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்?...
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடையை அடி?...