ஓடும் பேருந்தில் ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிக்கொண்ட இரு தரப்பினர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகையில் ஓடும் பேருந்தில் மோதலில் ஈடுபட்ட இருதரப்பினர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். நாகை புதிய பேருந்து நிலையத்திலிருந்து, தஞ்சாவூர் நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்தில் கைக்குழந்தைகளோடு பயணம் செய்த ஒரு தரப்பினருக்கும், 2 இளைஞர்களுக்கும் இடைய வாய்த்தகராறு ஏற்பட்டு அது கை கலப்பாக மாறியது. பேருந்து உள்ளேயே மாறி மாறி  சரமாரியாக தாக்கி கொண்ட அவர்கள், வெளிப்பாளையம் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கினர். தொடர்ந்து ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் மாறி மாறி தாக்கிகொண்டனர். தகவல் அறிந்து  வெளிப்பாளையம்  போலீசார் வருவது தெரிந்ததும் இரு தரப்பினரும் அங்கிருந்து தப்பியோடினர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

varient
Night
Day