திருவிழாவை முன்னிட்டு விமரிசையாக நடந்த மாட்டு வண்டி பந்தயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவகங்கை - தொண்டி சாலையில் பெரியமாடு, சிறியமாடு என 2 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 37 ஜோடி மாடுகள் பங்கேற்றன. போட்டியில், பெரிய மாட்டிற்கு 8 மைல் தூரமும் சிறிய மாட்டிற்கு 6 மைல் தூரமும் போட்டி எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. போட்டி தொடங்கியதும் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை சாலையின் இருபுறமும் நின்ற பொதுமக்கள் கைதட்டி உற்சாகத்துடன் ரசித்தனர். போட்டி முடிவில் முதல் 3 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளருக்கும் சாரதிக்கும் ரொக்கப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Night
Day