எழுத்தின் அளவு: அ+ அ- அ
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பிரச்சாரத்தின் போது இரு திமுக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார் உளுந்தூர்பேட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அவருடன் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ ஏ.ஜெ மணிக்கண்ணன் மற்றும் திருநாவலூர் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் முருகனும் உடனிருந்தனர். பாண்டூர் கிராமத்தில் ஒரு இடத்தில் திமுக பொறியாளர்கள் அணியை சேர்ந்த பாஸ்கர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேட்பாளர் ரவிக்குமாரை வரவேற்க காத்திருந்தனர். அங்கு வேட்பாளரை பேசுமாறு பாஸ்கர் கேட்டுக்கொண்டார். அதற்கு நேரமில்லை என்று கூறி திருநாவலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன் மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது.