தருமபுரி : பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்த திமுகவினர் - பயணிகள் கடும் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் திமுக நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்த பேருந்துகளை அப்புறப்படுத்தி ஆளும் திமுகவினரின் சொகுசு கார் மற்றும் பிரச்சார வாகனங்களை நிறுத்தி பிரச்சாரம் செய்தனர். இதனால் பேருந்துகளில் செல்ல முடியாமல் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும் ஆளும் கட்சியினரின் அராஜகத்தை, காவல்துறையும், தேர்தல் அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

varient
Night
Day