மயிலாடுதுறையில் சிறுத்தை - பள்ளிக்கு விடுமுறை

எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

மயிலாடுதுறை அருகே உள்ள கூறைநாடு பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் சிறுத்தையை கண்டதாக சிலர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த செய்தி அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவ, ஏராளமானோர் ஒன்று கூடினர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுத்தையின் கால்தடத்தை ஆய்வு செய்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். இதில் சிறுத்தை ஒன்று சாலையில் நடமாடியதும், அதனை நாய்கள் துரத்தியதும் தெரியவந்தது. 

சிறுத்தை நடமாட்டம் காரணமாக இன்று கூறைநாட்டில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சிறுத்தையை தேடி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Night
Day