இளம்பெண் மரண வழக்கு - கணவன் முதல் குற்றவாளி

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் அவிநாசி இளம்பெண் தற்கொலை வழக்கில் அவரது கணவரான கவின்குமார் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே காருக்குள் பூச்சிமருந்து உட்கொண்டு இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலை செய்வதற்கு முன் கண்ணீர் மல்க தந்தைக்கு உருக்கமாக பேசிய ஆடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து ரிதன்யாவின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறத்தி அவரின் உறவினர்கள் போராடிய நிலையில், கணவர் கவின்குமார், அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக கணவர் கவின்குமார், இரண்டாவது குற்றவாளியாக மாமனார் ஈஸ்வரமூர்த்தி, 3 வது குற்றவாளியாக மாமியார் சித்ராதேவி ஆகியோரின் பெயர்கள் முதல் தகவலறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. 3 பேரும் திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் 3வது குற்றவாளியான சித்ராதேவிக்கு உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தினால் அவரை மட்டும் நீதிமன்றம் விடுவித்துள்ளது. மேலும், எப்போது அழைத்தாலும் சித்ராதேவி காவல் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. 

Night
Day