இந்திய தேசிய லோக் தள கட்சியின் மாநிலத் தலைவர் சுட்டுக்கொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹரியானாவில் இந்திய தேசிய லோக் தள கட்சியின் மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நஃபே சிங் ரதி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஹதூர்கர் பகுதியில் நஃபே சிங் ரதி, காரில் பயணித்த போது மற்றொரு காரில் வந்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் நஃபே சிங் ரதியும், அவருடன் பயணித்த மற்றொரு நபரும் உயிரிழந்தனர். மேலும், காரில் இருந்தவர்களும் காயமடைந்துள்ளனர். அடையாளம் தெரியாத நபர்கள் இதை செய்துள்ளதாகவும், அவர்களை தேடும் பணியை மேற்கொண்டு வருவதாகவும். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

varient
Night
Day