இடத்தகராறு - மாற்றுத்திறனாளி மீது ஜல்லிக்கற்கள் கொட்டிய கொடூரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே இடப்பிரச்சினையில் மாற்றுத்திறனாளி மீது லாரியில் இருந்து ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கொண்ட சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பார்த்திபன் என்பவரின் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை அதே கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன், ஜெய்சங்கர் ஆகியோர் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் அந்த இடத்தில் வீடு கட்டவதற்காக ஜல்லி கற்களை கொட்ட முயன்றனர். இதனை பார்த்திபன் தரையில் அமர்ந்து தடுக்க முயன்ற போது அவர் மீது ஜல்லி கற்கள் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

varient
Night
Day