5- வது நாளாக அமளி - மக்களவை ஒத்திவைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக 5வது நாளாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி தொடங்கியது. கடந்த 4 நாட்களாக இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. 

5வது நாளாக இன்று மக்களவை கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சி எம்பிக்கள், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். அவையின் மையப்பகுதியில் கூடி முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் கேட்டுக்கொண்டும் தொடர் அமளி மற்றும் கூச்சல் எழுப்பியதால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

மாநிலங்களவை இன்று கூடியதும் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். பின்னர், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், அவை பிற்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.


Night
Day