ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த, வழக்கில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த கொலை வழக்கில் நெல்லையில் பதுங்கியிருந்த வைரமணி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கைதான வைரமணி ஆற்காடு சுரேஷின் கூட்டாளி என்பது தெரியவந்தது. 

varient
Night
Day