ஆணவக் கொலை - தந்தை, மகனை காவலில் எடுத்து விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

கவின் ஆணவக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கவினை வெட்டிக் கொலை செய்த இளைஞர் சுர்ஜித் மற்றும் அவரது தந்தையும், சிறப்பு காவல் உதவி ஆய்வாளருமான சரவணனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி, நெல்லை மாவட்ட 2வது கூடுதல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து விசாரணையை தொடங்கிய அதிகாரிகள், சிபிசிஐடி அலுவலகத்தில் இருவரையும் அழைத்துவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day