"உள்நோக்கம் இல்லாமல் பெண்ணின் கையை பிடித்து இழுப்பது குற்றமாகாது"

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உள்நோக்கம் இல்லாமல் பெண்ணின் கையை பிடித்து இழுப்பது குற்றமாகாது என உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் கடந்த 2015ல் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் கையை பிடித்து இழுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீசார் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் முருகேசனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை பிசிஆர் நீதிமன்றம் முருகேசனுக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து 2018ல் தீர்ப்பளித்தது. இதை ரத்து செய்யக்கோரி முருகேசன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, உள்நோக்கம் இல்லாமல் பெண்ணின் கையை பிடித்து இழுப்பது குற்றமாகாது என மனுதாரருக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Night
Day