லைசென்ஸ் கேட்டு டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

எழுத்தின் அளவு: அ+ அ-

வாகன ஓட்டுனர் உரிமத்தை மீண்டும் வழங்கக்கோரி டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியதாக கூறி, பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை பத்து ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வாசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கடந்தாலே புதிய உரிமம் வழங்கக்கோரி நீதிமன்றத்தை நாடலாம் என மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 6 மாதங்கள் கடந்து விட்டால் ஓட்டுநர் உரிமம் கோரி நீதிமன்றத்தைதான் நாட வேண்டும் என்ற அவசியமில்லை, உரிய அதிகாரிகளை அணுகலாம் என தெரிவித்து மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Night
Day