எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்று மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆவடி காவல் ஆணையரகத்தில் திருமுல்லைவாயலை சேர்ந்த தண்டபாணி என்பவர் புகார் அளித்தார். அதில், கடந்த 2018ம் ஆண்டு வழக்கறிஞர் ரபி ஜெயக்குமார் மற்றும் ஜெயகாந்தன் ஆகியோர் உதவியுடன் பாஜக முன்னாள் நிர்வாகி மிண்ட் ரமேஷ் என்பவரிடம் 47 லட்சம் ரூபாய்க்கு இடம் ஒன்றை வாங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பின்னர், மின் இணைப்பு பெறுவதற்காக தண்டபாணி விண்ணப்பித்த போது, போலி பட்டா மூலம் இடம் விற்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேள்வி எழுப்பிய போது, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த தண்டபாணி, மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.